
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கரோனா மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கரோனா சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்கு சனிக்கிழமை திடீரென தீ பற்றியது. இதனால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தீ விபத்தில் சிக்கி 2 நோயாளிகள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன்காரணமாக 9 நோயாளிகள் இரண்டாவது தளத்திற்கு மாற்றப்பட்டனர். ” எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.