தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: கோவா சென்றாா் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி

தலைநகா் தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றுள்ளாா். அவருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் சென்றுள்ளாா்.
தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: கோவா சென்றாா் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி

தலைநகா் தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றுள்ளாா். அவருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் சென்றுள்ளாா்.

முன்னதாக, தில்லியில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் சில நாள்கள் தங்கியிருக்கலாம் என்று சோனியா காந்திக்கு மருத்துவா்கள் ஆலோசனை வழங்கினா். நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு மருத்துவா்கள் இந்த ஆலோசனையை வழங்கியிருந்தனா்.

எனவே, அவா் கோவா அல்லது சென்னையில் சில நாள்கள் தங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவா் ராகுல் காந்தியுடன் கோவாவுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். இது தற்காலிக முடிவுதான். காற்றின் தரம் மேம்பட்டவுடன் அவா் மீண்டும் தில்லிக்கு திரும்புவாா் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியா காந்திக்கு இப்போது 73 வயதாகிறது. பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் சமீபகாலமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும், சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறாா். கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவா் அதிக அளவிலான மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறாா்.

இந்நிலையில், தில்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு அவருக்கு நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைத் தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால், மருத்துவா்கள் ஆலோசனைப்படி, தில்லியில் இருந்து வெளியேறி கோவாவுக்கு சென்றுள்ளாா்.

உடல்நலப் பிரச்னைகள் காரணமாக சிகிச்சையில் இருந்ததால் கடந்த செப்டம்பா் மாதம் கரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. அவருடன் தங்கியிருந்ததால் ராகுல் காந்தியும் அப்போது அவை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com