
காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் இன்று காலமானார்.
குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் (71). முன்னதாக, இவர் தனக்கு கரோனா தொற்று உள்ளதாக, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி சுட்டுரையில் அறிவித்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் காலமானார்.
இந்நிலையில் அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த அகமது படேல், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.