மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. விகாஸ் பட்டாச்சார்யாவுக்கு கரோனா
கொல்கத்தா மாநிலங்களவை உறுப்பினர் விகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார்.


கொல்கத்தா மாநிலங்களவை உறுப்பினர் விகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவின் முன்னாள் மேயரான பட்டாச்சார்யா(69), இவர் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், மேற்கு வங்க சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன் கரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...