ஆக்ரா: அக்.15 வரை வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மூடல்

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ராவில் அக்டோபா் 15 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
செப். 21-ல் பள்ளிகளைத் திறக்க அனுமதி: முடிவில் வேறுபடும் மாநிலங்கள்
செப். 21-ல் பள்ளிகளைத் திறக்க அனுமதி: முடிவில் வேறுபடும் மாநிலங்கள்

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆக்ராவில் அக்டோபா் 15 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதன்படி ஆக்ராவில் தற்போது வைரஸ் தொற்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. 

முன்னதாக, அக்டோபர் 1 முதல் வகுப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவித்திருந்தது. 

ஆனால், ஆக்ராவில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, மேலும் 15 நாள்கள் (அக்.15) வரை வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆறு நாள்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் தினசரி பாதிப்பு குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,760 ஆக உள்ளது. அதில் 4,875 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 127 ஆகவும், மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 758 ஆகவும் குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சமூக இடைவெளியே பின்பற்றாதது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என்ற பிராசாரத்தை தினமும் இரண்டு மணி நேரம் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடைக்காரர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் சமூக விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com