'பள்ளிகளில் நீர் விநியோகத்தை உறுதிசெய்ய 100 நாள்கள் பிரச்சாரம்'

நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில்  நீர்வளத்துறை சார்பில் நூறு நாள்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வெள்ளிக்கிழமையான இன்று நீர்வளத்துறை சார்பில் நூறு நாள்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலான 100 நாள் பிரச்சாரத்தை நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் துவக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது, ''அரசுப் பள்ளிகளில் தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் இந்த பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொள்கிறேன். 

இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். தங்கள் பகுதிகளில் இந்த பிரச்சாரத்தை துவக்கி உதவிபுரிய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

''கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான எம்பலத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பள்ளிகளில் குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

''அதன் எதிரொலியாக தற்போது அரசுப் பள்ளிகளில் தண்ணீர் விநியோகத்தை உறுதிசெய்வதற்காக 100 நாள்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரமான தண்ணீர் வருவதை அடுத்த 100 நாள்களுக்குள் உறுதி செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ''ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு 2024-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் பைப்லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் ஷெகாவத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com