பஞ்சாப்: 9-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் 9-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்
பஞ்சாப்: 9-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்: 9-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

சண்டிகர்: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் 9-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பஞ்சாபில் பாஜக தலைவர் இல்லத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளனர்.

இதர்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே வேளாண சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 9-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மேலும் வியாழக்கிழமையான நேற்று முதல் காலவரையறை அற்ற ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராந்திகரி கிஷன் யூனியன் தலைவர் தர்ஷன் பால் கூறியதாவது, ''பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேரு பாஜக பிரமுகர்களின் இல்லங்களை முற்றுகையிட்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமிர்தசரஸில் உள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மாலிக் இல்லத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்'' என்று அவர் கூறினார்.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் சமிதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 24-ஆம் தேதி முதல் அமிர்தசரஸ் மற்றும் பெரோஷ்பூர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com