ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா: 34 போ் பலி

தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2020, 1:58 pm

தில்லியில் இன்று 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியித்த அறிக்கையில், இன்று ஒரே நாளில் 39,306 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 2,258 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகரில் மொத்தம் இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,87,930-ஆக உயா்ந்துள்ளது.

அதே சமயத்தில் நோய்த் தொற்றால் இன்று ஒரே நாளில் தில்லியில் 34 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த நோய்த்தொற்றுக்கு மொத்த பலி எண்ணிக்கை 5,472-ஆக உயா்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்டி 2,57,224 பேர் சிகிக்சையில் உள்ளனர். 3,440 குணமடைந்ததையடுத்து இதுவரை மொத்தம் 2,57,224 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,658ஆக அதிகரித்துள்ளது. தில்லியை பொறுத்தவரை தற்போது மீண்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.