தில்லியில் கரோனா பாதிப்பு 5.19% குறைந்தது

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் 5.19 சதவிகிதம் குறைந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் 5.19 சதவிகிதம் குறைந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா பரவல் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா பரிசோதனைகளை இரட்டிப்பாக்கி தில்லி அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு தனிமைப்படுத்த வேண்டிய பகுதிகளை கண்டறிந்து கரோனா தடுப்பு பணிகளை தில்லி அரசு மேற்கொண்டது. 

இதனால் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''வியாழக்கிழமையான நேற்று மட்டும் 56,258 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,920 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை முன்புடன் ஒப்பிடும்போது கரோனா பரவல் விகிதம் 5.19 சதவிகிதம் குறைந்துள்ளது'' என்று அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com