ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

கேரளத்தில் ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்.

Updated On :4 அக்டோபர் 2020, 4:26 pm

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 8,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,886 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று 23 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 836 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரேநாளில் 4,851 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,44,471 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 84,497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.