காசிரங்கா பூங்காவில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசிரங்கா பூங்காவில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
காசிரங்கா பூங்காவில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பூங்காவில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் காசிரங்கா தேசியப் பூங்காவை மீண்டும் திறக்கும் முடிவில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை அசாம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்துள்ளார். "காசிரங்கா தேசியப் பூங்கா கடந்த சில மாதங்களில் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்படுகிறது.” அன அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளநீர் பாதிப்பு சரியானபின் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என சுக்லபைத்யா தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பால் காசிரங்கா தேசியப் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com