பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராட்டிய சமுதாயத்தினர் போராட்டம்

மகாராஷ்டிரத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராட்டிய சமுதாயத்தினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 அக்டோபர் 2020, 10:39 am

DIN

மகாராஷ்டிரத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராட்டிய சமுதாயத்தினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரத்திலுள்ள மராட்டிய சமுதாயத்தினருக்கு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் சட்டம், 2018-ன் படி, கல்வி மற்றும் அரசு வேலைகளில் வாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

எனினும் இதுவரை வேலைவாய்ப்பிலுள்ள ஒடஒதுக்கீடு எண்ணிக்கை அல்லது சதவிகிதம் குறித்து மகாராஷ்டிர அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே அக்டோபர் 11-ஆம் தேதி மகாராஷ்டிர பொதுசேவை ஆணையத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும் இதுவரை இடஒதுக்கீடு குறித்து எந்த தகவலையும் வெளியிடாததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மராட்டியப் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மகாராஷ்டிரத்தின் உஸ்மானாபாத் பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில் அருகேயும், பர்லீன் பீட்  மாவட்டத்திலும் மராட்டியப் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர பொதுசேவை ஆணையத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.