ராம்விலாஸ் பாஸ்வான் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று (சனிக்கிழமை) தகனம் செய்யப்பட்டது.
ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
ராம்விலாஸ் பாஸ்வான் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கட்சி நிகழ்ச்சிகளில் ராம்விலாஸ் பாஸ்வான் முழங்கும் கோஷங்களை ஆதரவாளர்கள் எழுப்பினர்.
இதுதவிர்த்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், அஷ்வினி குமார், எதிர்க்கட்சித் தலைவர்கள் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் கட்சி பேதமின்றி பல்வேறு தலைவர்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.