ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மி-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படைவீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து காஷ்மீர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கம் பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...