
மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு ஆகஸ்ட் 22, 2021 வரை நீட்டித்துள்ளது.
நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற வேண்டிய நிலையில், அவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அஜய் பல்லா கடந்தாண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உள்துறைச் செயலர் பொறுப்பை ஏற்றார். மறு உத்தரவு வரும் வரை அல்லது ஆகஸ்ட் 22,2021 வரை பல்லாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய உள்துறைச் செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.