ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேட்பாளர்களின் பிரசார செலவை 10% உயர்த்திய மத்திய அரசு

இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரசார செலவுத் தொகையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது

News image
இந்தியத் தேர்தல் ஆணையம்
Updated On :20 அக்டோபர் 2020, 10:21 am

DIN

இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரசார செலவுத் தொகையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவின வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் படி வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதமாக உயர்த்த மத்திய சட்டத்துறை அமைச்சகமானது 1961 தேர்தல் சட்ட விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநிலத்திற்கு மாநிலம் செலவினத் தொகை மாறுபடும். தமிழகத்தைப் பொருத்தவரையில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.