சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நாட்டில் கரோனா பாதிப்பு 77 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 55,838 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து நான்காவது நாளாக 60,000-க்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

News image

நாட்டில் கரோனா பாதிப்பு 77 லட்சத்தைக் கடந்தது

Updated On :22 அக்டோபர் 2020, 5:16 am

DIN


புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 55,838 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து நான்காவது நாளாக 60,000-க்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 55,838 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 77,06,946-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 702 போ் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,16,616-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.51 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து நேற்று புதன்கிழமை மட்டும் 79,425 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 68,74,518-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 89.20 சதவீதமாகும்.

நாடு முழுவதும் தற்போது 7,15,812 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து ஆறாவது நாளாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 14,69,098 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 21-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 9,86,70,363 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.