மங்களூரு மீனவரின் வலையில் சிக்கிய 750 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்
மங்களூரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய 750 கிலோ எடை கொண்ட திருக்கை மீனைக் காண பொதுமக்கள் குவிந்தனர்
கர்நாடக மாநிலம் மங்களூரில் மீனவர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வலையில் இரண்டு பெரிய திருக்கை மீன்கள் சிக்கியுள்ளன.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் கரையை அடைந்த பிறகு பெரிய கிரேன் உதவியுடன் அவை கப்பலிலிருந்து கரைக்கு கொண்டு வந்தார். இரண்டு திருக்கை மீன்களின் எடைகள் முறையே 750 கிலோ, 250 கிலோ என இருந்ததால் அதனைக் காண பொதுமக்கள் கூடினர்.
ராட்சத திருக்கை மீன்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.