பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பை உள்ளூர் ரயிலில் திடீர் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குளிரூட்டி வசதிகொண்ட ரயிலில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

News image
ரயிலில் ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்
Updated On :23 அக்டோபர் 2020, 6:55 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குளிரூட்டி வசதிகொண்ட ரயிலில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை ரயில் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்திமிடத்திற்கு அருகில் இருந்த ஒருங்கிணைந்த மின்சாதன கண்காணிப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்திற்கும் பரவியது.

உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. எனினும் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பு கார் நிறுத்துமிடத்தில் இருந்த தீயணைப்பான் மற்றும் தண்ணீர் கொண்டு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட சில மணிநேரங்களில் தீ அணைக்கப்பட்டதால், பயணிகளின் பெட்டகத்திற்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர்.

ரயிலில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவுவது தடுக்கப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.