கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதத்தை எட்டுகிறது!
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 90 சதவீதத்தை எட்டுகிறது.


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 90 சதவீதத்தை எட்டுகிறது.
நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 55,366 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 77,61,312-ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த மாதம் 28-ஆம் தேதி 60 லட்சத்தையும், கடந்த 11-ஆம் தேதி 70 லட்சத்தையும் கடந்திருந்தது. தொடா்ந்து நான்காவது நாளாக 60,000-க்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 690 போ் உயிரிழந்தனா். அதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,306-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் 1.51 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 73,979 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,48,497-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 89.53 சதவீதமாகும்.
நாடு முழுவதும் தற்போது 6,95,509 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 8.96 சதவீதமாக குறைந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரத்தில் 42,633 பேரும், கா்நாடகத்தில் 10,696 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,755 பேரும், ஆந்திரத்தில் 6,508 பேரும், மேற்கு வங்கத்தில் 6,244 பேரும், தில்லியில் 6,128 பேரும், பஞ்சாபில் 4,060 பேரும், குஜராத்தில் 3,660 பேரும் உயிரிழந்தனா்.
நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 14,42,722 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 10,01,13,085 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...