கேரளம்: உயிரியல் பூங்கா கூண்டிலிருந்து தப்பித்த புலி

கேரள மாநிலம் நெய்யாறு உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த புலி, கூண்டுக்குள் இருந்து தப்பிய செய்தி பரவியதும், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
கேரளம்: உயிரியல் பூங்கா கூண்டிலிருந்து தப்பித்த புலி
கேரளம்: உயிரியல் பூங்கா கூண்டிலிருந்து தப்பித்த புலி


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யாறு உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த புலி, கூண்டுக்குள் இருந்து தப்பிய செய்தி பரவியதும், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

கூண்டிலிருந்த புலி காணாமல் போனதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில், வெறும் இரண்டு மணி நேரத்தில், உயிரியல் பூங்காவின் வாயிலுக்கு அருகே புலி பிடிபட்டது.

வயநாடு வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வாழும் பகுதிக்கு வந்து ஏராளமான கால்நடைகளை அடித்துக் கொன்றதால், 9 வயதான பெண் புலியை வனத்துறையினர் பிடித்து நெய்யாறு உயிரியல் பூங்காவில் அடைத்து வைத்திருந்தனர்.  

இந்த நிலையில், கூண்டுக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தனது பற்களால் கடித்து அகற்றிய பெண் புலி, கூண்டிலிருந்து தப்பி வெளியேறிய நிலையில், அதிர்ஷ்டவசமாக இரண்டு மணி நேரத்தில் பிடிபட்டது அப்பகுதி மக்களை நிம்மதியடையச் செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com