ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் உருது, காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாகவுள்ளன.
பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இது செய்யப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...