மகாராஷ்டிரம் அல்லது மும்பையில் வாழ கங்கனாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் அனில் தேஷ்முக்
மும்பை காவல்துறையை விமர்சிக்கும் கங்கனாவுக்கு மகாராஷ்டிரம் அல்லது மும்பையில் வாழ உரிமை இல்லை என்று அம்மாநில அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.


மும்பை காவல்துறையை விமர்சிக்கும் கங்கனாவுக்கு மகாராஷ்டிரம் அல்லது மும்பையில் வாழ உரிமை இல்லை என்று அம்மாநில அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மும்பைக் காவல்துறைக்கு எதிராக கங்கனா ரனாவத் அண்மையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இதை எதிர்த்த சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத், மும்பைக் காவல்துறையை அவமதிக்கும் செயல் இது. அவரை மும்பைக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் கங்கனா, மும்பைக்கு நான் வரக்கூடாது எனப் பலர் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இந்த வாரம் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவிக்கையில், மும்பை காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுடன் ஒப்பிடலாம். சிலர் மும்பை காவல்துறையை குறிவைக்கின்றனர். இதற்கு எதிராக மும்பை ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். மும்பையில் இருப்பது பாதுகாப்பற்றது என கங்கனா கருதினால், அவர் இங்கு வாழ உரிமை இல்லை. மும்பை காவல்துறை மீதான கங்கனாவின் குற்றச்சாட்டுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...