அருணாசலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 127 பேருக்குத் தொற்று

அருணாசலில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 
Arunachal continues to witness spike in Covid-19 cases, tally mounts to 5672
Arunachal continues to witness spike in Covid-19 cases, tally mounts to 5672
Updated on
1 min read

அருணாசலில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 5,672 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 99 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு விகிதம் 70.61 ஆக உள்ளது. 

தற்போது நோய் பாதிப்பு ஏற்பட்டு 1,658 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com