தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கரோனா பரிசோதனை செய்து கொண்டார் வெங்கையா நாயுடு

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக, கரோனா பரிசோதனையை செய்து கொண்டார் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு.

News image
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கரோனா பரிசோதனை செய்து கொண்டார் வெங்கையா நாயுடு
Updated On :11 செப்டம்பர் 2020, 12:41 pm

DIN

புது தில்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக, கரோனா பரிசோதனையை செய்து கொண்டார் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் கோவிட் பரிசோதனையை செய்து கொள்வது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவையில் கலந்து கொள்வதற்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்னும் பரிசோதனை அறிக்கை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனையை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை வெங்கையா நாயுடு இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார்.

சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ள இருக்கை ஏற்பாடுகளோடு, செயலகத்தின் பணியாளர்களைக் கொண்டு வெங்கையா நாயுடு தலைமையில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.