
நாட்டில் 177 மாவட்டங்களிலுள்ள பழங்குடி மக்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று பெரிய பாதிப்புகளை ஏதும் இதுவரை ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.
ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வின்படி, நாட்டில் 177 மாவட்டங்களிலுள்ள பழங்குடி மக்கள்தொகையில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழங்குடி மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் வகையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நியாயவிலைப் பொருள்கள், கிராமங்களிலிருந்து தண்ணீர், கரோனாவால் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களின் அளவிற்கு இடையே உள்ள இடைவெளிகளை கண்டறிவதையும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.
நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை, ஆயுஷ் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து பழங்குடி மக்களுக்கான திட்டங்களை பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.