கேரளத்தில் மிக அதிகக் கனமழைக்கு வாய்ப்பு: சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளத்தின் இடுக்கி, கன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிக அதிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Extremely heavy rains predicted in Kerala, Red, Orange alerts issued
Extremely heavy rains predicted in Kerala, Red, Orange alerts issued


திருவனந்தபுரம்: கேரளத்தின் இடுக்கி, கன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிக அதிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிக அதிகக் கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளில், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடகிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், கேரளத்தின் இடுக்கு, கன்னுர், காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com