பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து சுகாதாரத் துறை ரூ. 893.93 கோடி பெற்றுள்ளது: ஹர்ஷ வர்தன்

பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, "கரோனா தொற்றை எதிர்கொள்ளவே பிம்-கேர்ஸ் உருவாக்கப்பட்டது. பிம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களுக்காக பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து எனது அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com