மும்பை குடியிருப்புக் கட்டட விபத்து: பலி 41 ஆக உயர்வு!

மும்பை குடியிருப்புக் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 
மும்பை குடியிருப்புக் கட்டட விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
மும்பை குடியிருப்புக் கட்டட விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

மும்பை குடியிருப்புக் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் இருந்து10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிவாண்டி நகரில் உள்ள மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம், திங்கள்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு குடியிருப்புவாசிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இடிந்து விழுந்தது. 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தில் சுமார் 150 பேர் வரையில் வசித்து வந்துள்ளனர். விபத்து நடந்த அன்று 20 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. தொடர்ந்து மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் 11 பேர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். மேலும் பெண்களும் அடங்குவர். 

தொடர்ந்து 4 ஆவது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்தாக  தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com