
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் இது குறித்து பேசிய கைலாஷ் செளத்ரி, ''மாநில தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகள் நலனுக்கான காங்கிரஸ் கட்சி உழைக்கும் என்று கூறிய நிலையில், தற்போது பா.ஜ.க. அதனைச் செய்தால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனை நோக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது புரட்சிகரமான ஒன்று. விவசாயிகள் சுயம் சார்ந்து வருவாய் ஈட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
விவசாயிகளின் அனுமதியுடனே மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த மசோதாக்களின் மூலம் விவசாயிகள் எங்கிருந்தாலும் விளைப்பொருள்களை தாங்கள் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யலாம். விளையும் பயிர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும், விவசாய நிலங்களில் எந்த ஒப்பந்தமும் இல்லை. எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன'' இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.