

புதுதில்லி: மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் 88 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை நாடு தற்போது உணருகிறது; அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.