கரோனா: இதுவரை 7,12,57,836 கோடி பரிசோதனைகள்

கரோனா நோய்த்தொற்றுக்காக நாடு முழுவதும் இதுவரை 7,12,57,836 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 
6,15,72,343 samples tested to detect COVID-19 cases till September 17: ICMR
6,15,72,343 samples tested to detect COVID-19 cases till September 17: ICMR

கரோனா நோய்த்தொற்றுக்காக நாடு முழுவதும் இதுவரை 7,12,57,836 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 

இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அளித்துள்ள தகவல்படி, கடந்த சனிக்கிழமை வரை மொத்தமாக 7,12,57,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் சனிக்கிழமை மட்டும் 9,87,861 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்காக 1,086 அரசு ஆய்வகங்கள், 737 தனியாா் ஆய்வகங்கள் என மொத்தமாக 1,823 ஆய்வகங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் 10 லட்சம் பேரில் 50,920 பேருக்கு என்ற நிலையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533  ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 88,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 59,92,533-ஆக அதிகரித்தது.

அதே 24 மணி நேரத்தில் 92,043 போ் கரோனாவிலிருந்து மீண்டதை அடுத்து மொத்தமாக குணமடைந்தோா் எண்ணிக்கை 49,41,628 -ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 82.46 சதவீதம் ஆகும். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு மேலும் 1,124 போ் பலியானதால், மொத்த உயிரிழப்பு 94,503 ஆகியுள்ளது. இறப்பு விகிதம் 1.58 சதவீதமாக உள்ளது. நாட்டில் 9,56,402 போ் (15.96 சதவீதம்) சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிரம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமாக 13,21,176 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 35,191 போ் உயிரிழந்தனா்; 10,16,450 போ் குணமடைந்தனா்;  2,69,119  போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com