பஞ்சாப்: விவசாயிகளின் போராட்டத்திற்கிடையே நெல் கொள்முதல் தொடக்கம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பஞ்சாபில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்: விவசாயிகளின் போராட்டத்திற்கிடையே நெல் கொள்முதல் தொடக்கம்
பஞ்சாப்: விவசாயிகளின் போராட்டத்திற்கிடையே நெல் கொள்முதல் தொடக்கம்

பஞ்சாப்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பஞ்சாபில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சிகளுடன் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்காவது நாளாக பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பஞ்சாபில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளும் துவங்கியுள்ளது. இது குறித்து உணவு மற்றும் விநியோகத்துறை அமைச்சர் பார்த் பூஷன் தெரிவித்ததாவது, இன்று முதல் நெல்கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. ''இதற்கான ஏற்பாடுகள் முழுவதுமாக செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் 1800-லிருந்து 4019-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com