தெலங்கானாவில் கரோனா மீட்பு விகிதம் 84 சதவீதத்தைத் தாண்டியது

தெலங்கானாவில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா மீட்பு விகிதம் 84 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
Telangana's Covid recovery rate crosses 84 per cent
Telangana's Covid recovery rate crosses 84 per cent

தெலங்கானாவில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா மீட்பு விகிதம் 84 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் 2,243 பேர்  கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,60,933 ஆக உயர்ந்துள்ளது. 
இதன் மூலம் மாநிலத்தின் மீட்பு விகிதம் தேசிய சராசரியான 83.27 சதவீதத்திலிருந்து 84.08 சதவீதமாக உயர்ந்தது.

மேலும் ஒரே நாளில் 11 பேர் கரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இறப்பு விகிதம் தேசிய சராசரியான 1.57 சதவீதத்திலிருந்து 0.58 சதவீதமாக உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் 1,91,386 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 29,326 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் வீடு மற்றும் நிறுவனங்களில் தனிமைப்படுத்துதலில் 23,880 பேர்  அடங்குவர்.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 17 அரசு ஆய்வகங்கள், 43 தனியார் ஆய்வகங்கள் மற்றும் 1,076 விரைவான ஆன்டிஜென் சோதனை மையங்களில் 55,359 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் அரசு இதுவரை 29,96,001 மாதிரிகளை பரிசோதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com