கரோனா பாதித்தவர்களில் 63% பேர் ஆண்களே: மகாராஷ்டிர அரசு தகவல்

இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
கரோனா பாதித்தவர்களில் 63% பேர் ஆண்களே: மகாராஷ்டிர அரசு தகவல்

புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் 748 பேரில் 63% பேர் ஆண்கள் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி மற்றும் மருந்துத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு இதுவரை 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், மரண விகிதம் 6.01% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண சம்பவங்களில் ஏப்ரல் 3ம் தேதி மூன்று மரணங்களும், ஏப்ரல் 6ம் தேதி 13 மரணங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பைதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 458 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. புணேவில் 100 பேருக்கும், தாணேவில் 82 பேருக்கும், சங்லியில் 25 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 16 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உலக அளவில் 12 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. 70 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com