கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத் துறை

​கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத் துறை


கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,445 பேர் தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள். 76 சதவீதம் ஆண்களுக்கும், 24 சதவீதம் பெண்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. பலியானவர்களில் 63 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 30 சதவீதம். 40 வயதுக்கும் குறைவானவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 7 சதவீதம்.

மாநிலங்களுக்கான தேசிய நல்வாழ்வு ஒதுக்கீட்டிலிருந்து ரூ. 1,100 விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ. 3,000 கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com