கரோனா பாதித்த 3-ல் ஒரு பங்கினர் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்: சென்னையும் ஒன்று

இந்தியாவில் கரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர் வெறும் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்,
கரோனா பாதித்த 3-ல் ஒரு பங்கினர் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்: சென்னையும் ஒன்று

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர் வெறும் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

இதில், தெற்கு தில்லி தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 320 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாவட்ட வாரியாக கரோனா பாதித்தவர்களின் பட்டியலை மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாவட்டங்களில், கரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 4,067ல் 1,386 பேர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தெற்கு தில்லியை அடுத்து மும்பை 298 கரோனா நோயாளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கேரளாவின் காசர்கோடு, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், தெலங்கானாவின் ஹைதராபாத் ஆகிய மாவட்டங்களில் தலா  100 நோயாளிகள்  உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், ஆமதாபாத், கன்னூர், புணே, ஜெய்ப்பூர், சென்னை, யாதாரி மற்றும் கௌதம் புத் நகர் மாவட்டங்களிலும் 50க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர்.

மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி ஆகியவை தலா 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் உள்ளன. தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு சூழ்நிலை என்பது மிக வேகமாக மாறி வருகிறது. 

ஏப்ரல் 14ம் தேதியுடன் நாடு முழுவதும் ஊரடங்கு நிறைவுக்கு வரவிருக்கும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை கணக்கெடுத்து அங்கெல்லாம் ஊரடங்கை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த 12 மாவட்டங்களின் பட்டியல்..
1. தெற்கு தில்லி  - 320
2. மும்பை - 298
3. காசர்கோடு - 136
4. ஹைதராபாத் - 113
5. இந்தூர் - 110
6. சென்னை - 81
7. புணே - 62
8. கௌதம் புத் நகர் - 55
9. ஜெய்ப்பூர் - 54
10. ஆமதாபாத் - 53
11. யாதாரி - 52
12. கன்னூர் - 52
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com