ஒடிஸாவில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வெளியே வருவோருக்கு முகக்கவசம் கட்டாயம்

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கும் முதல் மாநிலமாக மாறியிருக்கிறது ஒடிஸா
ஒடிஸாவில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வெளியே வருவோருக்கு முகக்கவசம் கட்டாயம்


புவனேஸ்வர்: கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கும் முதல் மாநிலமாக மாறியிருக்கிறது ஒடிஸா.

முகக் கவசம் அல்லது இரண்டு துணிகளைக் கொண்டு தைக்கப்பட்ட சாதாரண முகக்கவசம் ஏதேனும் ஒன்றை அணிந்து கொண்டுதான் ஏப்ரல் 9ம் தேதி காலை 7 மணி முதல் பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்று ஒடிஸா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும், ஏதேனும் ஒரு முகக் கவசத்தைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாயை மறைத்தபடிதான் வெளியே வர வேண்டும் என்று என்று அறிவுறுத்தப்படுகிறது. கைக்குட்டை அல்லது வேறு ஏதேனும் இரண்டு துணிகளைக் கொண்ட முகக் கவசத்தை அணிந்து கொண்டுதான் வெளியே வர வேண்டும். இது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நீர்த்திவலைகள் மூலம் இந்த கரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com