தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு

கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 
தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு

கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தகவல்களை ஒரே சமயத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். இனி, அதிகம் பகிரப்படும் தகவல்களை ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா குறித்து போலி தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com