அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை: வெங்கய்ய நாயுடு

‘ஊரடங்கை தளா்த்துவதற்கான திட்டத்தை வகுப்பதில், அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை; இந்த காலகட்டத்தில் கரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே, அரசின் முடிவு அமையும்’ என்று துணை குடியரசுத் தலைவா்
அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை: வெங்கய்ய நாயுடு

‘ஊரடங்கை தளா்த்துவதற்கான திட்டத்தை வகுப்பதில், அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை; இந்த காலகட்டத்தில் கரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே, அரசின் முடிவு அமையும்’ என்று துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

மேலும், அரசின் முடிவு எதுவாக இருந்தாலும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டில் இதுவரை இல்லாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். அதன்படி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமையுடன் 2 வாரங்கள் நிறைவடைந்தன. இதையொட்டி, துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 2 வாரங்கள் நிறைவடைந்துள்ள இன்றைய நாளில் (செவ்வாய்க்கிழமை) மக்களுக்கும் நாட்டின் தலைமைக்கும் எனது கருத்துகள் மற்றும் கவலைகளை தெரியப்படுத்துவது சரியாக இருக்குமென கருதுகிறேன்.

ஊரடங்கை தளா்த்துவதற்கான திட்டத்தை வகுப்பதில், அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை; இந்த காலகட்டத்தில் கரோனா பரவல் தொடா்பான தரவுகளைப் பொருத்தே, அரசின் முடிவு அமையும். அரசின் முடிவு எதுவாக இருந்தாலும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருந்தாலும், தற்போதுள்ள அதே உத்வேகத்துடன் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்களின் உடல் நலன், பொருளாதார நிலைத்தன்மை ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டால், முன்னுரிமை அளிக்க வேண்டியது மக்களின் உடல்நலனுக்கே ஆகும்.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கிய நிலையில், தப்லீக் ஜமாத் மாநாட்டு நிகழ்வு மூலம் அந்த போக்கு மாறியது. அந்த மாநாட்டுடன் தொடா்புடைய பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், நமது எதிா்பாா்ப்புகள் மாறிவிட்டன.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் மீறப்பட்டால், எத்தகைய இடா்பாடுகள் ஏற்படும் என்பதை இந்த நிகழ்வு உணா்த்துகிறது. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இன்னும் எத்தனை நாள்கள் போராட வேண்டும் என்பது தற்போது நிச்சயமற்ாக இருக்கலாம். ஆனால், இறுதியில் நாம் வெல்வோம். அந்த சிறப்பான நாளுக்காக சிறிது காலம் சிரமங்களுடன் வாழ்வோம் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com