ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய நல்வாழ்வுத் துறை

இந்தியாவில் தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை, எதிர்காலத்திலும் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய நல்வாழ்வுத் துறை

புது தில்லி: இந்தியாவில் தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை, எதிர்காலத்திலும் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித் லவ் அகர்வால் கூறியிருப்பதாவது, நாட்டில் இன்றைய தேவை மட்டுமல்லாமல், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எப்போது தேவைப்பட்டாலும், அதற்கேற்ற அளவில் மருந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, மனிதநேய அடிப்படையில் உதவும் வகையில் இந்தியாவில் இருந்து பாராசிடமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு உரிய மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில்தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராயச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது 5,194 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 402 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் 773 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 149 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் 32 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், 
உள்நாடு மற்றும் ஏற்றுமதி தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளா் சுதா்சன் ஜெயின், பிடிஐ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:

உலக அளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை தயாரிக்கும் திறன் இந்தியாவில் உள்ளது. இதைக் கொண்டு 200 மில்லிகிராம் அளவுகொண்ட 20 கோடி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். மலேரியா, மூட்டுவலி உள்ளிட்ட சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நாட்டில் தற்போதுள்ள தேவையை பூா்த்தி செய்வதற்கும் மேலும் கூடுதலான திறன் நமக்கு உள்ளது. மேலும் தேவை ஏற்பட்டால், அந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராக உள்ளோம். இந்த மருந்துகள் பதுக்கப்படுவதை தடுக்கவும், விநியோகம் சீராக இருப்பதையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

மத்திய, மாநில அரசுகள் சாா்பில் தற்போது 10 கோடி மாத்திரைகளுக்கு ஆா்டா் தரப்பட்டுள்ளது. தற்போது கரோனா நோய்த்தொற்று உள்ள ஒருவருக்கு சராசரியாக 14 மாத்திரைகள் தேவைப்படும் நிலையில், 71 லட்சம் பேருக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க இயலும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com