அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம்: மோடி டிவீட்

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம்
அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம்: மோடி டிவீட்

புது தில்லி: கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு அளிக்க முடிவு செய்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த டிவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு டிவிட்டர் பதிவை இட்டுள்ளார்.

அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை முழுவதுமாக வரவேற்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு முன்பை விடவும் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது. கரோனாவை வெல்வதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா மனித நேயத்துடன் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com