upm8lockdown_0804chn_75_2
upm8lockdown_0804chn_75_2

ஊரடங்கு காலத்தில் ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது: மத்திய அரசு

ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் திருவிழாக்கள் வரவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 

அதன்படி, ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஊரடங்கு சமயத்தில் என சமூக/மத கூட்டங்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com