கேரளத்தில் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது

கேரள மாநிலத்தில கரோனா பாதித்த கர்ப்பிணி அறுவை சிகிச்சை மூலம் இன்று ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
கேரளத்தில் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது


கன்னூர்: கேரள மாநிலத்தில கரோனா பாதித்த கர்ப்பிணி அறுவை சிகிச்சை மூலம் இன்று ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

காசர்கோடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பரியராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவக் குழுவினர் தற்காப்பு உடைகளை அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிரசவம் பார்த்தனர். குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் முதல் முறையாக கரோனா பாதித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. குழந்தையின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு தாயிடம் இருந்து குழந்தை தனித்து வைக்கப்படும். பிறகுதான் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கேரளத்தில் தற்போது 364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 130 பேர் காசர்கோடு பகுதியையும், 38 பேர் கன்னூர் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com