மேற்கு வங்கத்தில் கரோனா அபாயம் இருக்கும் 10 இடங்களுக்கு சீல்

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட 10 இடங்களுக்கு சீல் வைத்திருக்கும் மாநில நிர்வாகம், இங்கு அடுத்த 14 நாட்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கரோனா அபாயம் இருக்கும் 10 இடங்களுக்கு சீல்


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட 10 இடங்களுக்கு சீல் வைத்திருக்கும் மாநில நிர்வாகம், இங்கு அடுத்த 14 நாட்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்கு வங்க மாநில முதன்மைச் செயலாளர் ராஜீவா சின்ஹா கூறுகையில், கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் சந்தைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த பகுதிக்குள் யாரும் நுழையவும் முடியாது, இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேறவும் முடியாது. இங்கு வசிக்கும் நபர்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவும் அபாயம் அதிகம் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com