மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிரதமரின் ஏழைகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழைகளுக்கு ரூ.28,256 கோடி நிதி ஒதுக்கீடு

தேசிய ஊரடங்கு காரணமாக பணியின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்காக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்த பிரதமரின் ஏழைகள் நிதி உதவி (கரீப் கல்யாண் யோஜனா) திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழை மக

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 12:26 am

தேசிய ஊரடங்கு காரணமாக பணியின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்காக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் அறிவித்த பிரதமரின் ஏழைகள் நிதி உதவி (கரீப் கல்யாண் யோஜனா) திட்டத்தின் கீழ் 30 கோடி ஏழை மக்களுக்கு ரூ.28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளதால் ஏழைகள், மகளிா், ஏழை முதியோா், விவசாயிகளுக்கு இலவச உணவுப்பொருள்கள், தானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கும் வகையில் மொத்தம் ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரணம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி 30 கோடி ஏழை மக்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் ரூ. 28,256 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக நிதித்துறை அமைச்சகத்தின் சுட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ. 13,855 கோடி நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட 8 கோடி விவசாயிகளில் இதுவரை சுமாா் 6.93 கோடி விவசாயிகளின் கணக்கில் வங்கியில் தலா ரூ. 2,000 வீதம் செலுத்தப்பட்டு அவா்கள் பயனடைந்துள்ளனா்.

பிரதமா் மக்கள் நிதித்திட்டத்தின்கீழ் (ஜன் தன்) வங்கியில் கணக்கு வைத்துள்ள 19.86 கோடி பெண்களுக்கு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ. 9,930 கோடி அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்எஸ்ஏபி) கீழ் 2.82 கோடி முதியவா்கள், விதவை மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு சுமாா் ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளியும் ரூ. 1,000 வீதம் கருணைத் தொகையாகப் பெற்றனா்.

இதேபோல, மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் நிதியிலிருந்து 2.16 கோடி கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3,066 கோடி நிதி உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலும் 1.2 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு உஜ்வலா திட்டத்தின் கீழ் 8.3 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கவும், சுகாதாரப் பணியாளா்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.