இந்தியாவில் மருத்துவர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு


புது தில்லி: இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுவரை 300க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 763 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 39 பேர் மரணம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்பில் நாட்டிலேயே மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழகமும் தில்லியும் உள்ளன.

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று வழி நடத்துபவர்களாக இருப்பவர்கள் மருத்துவப் பணியாளர்களே. கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அந்த தொற்றால் பாதிக்கப்படும் அதிக வாய்ப்பு இருப்பவர்களும் மருத்துவப் பணியாளர்களே. 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சை அளித்த  நோயாளிகள் மற்றும் அவர்களுடன் பணியாற்றியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் எட்டு மருத்துவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர் குழுவினர் இரவு பகலாக போராடி வருகின்றனர். அவர்களது முயற்சியால் தொற்று நீங்கி குணமடைந்த நிலையில் பலர் வீடு திரும்பி வருகின்னர். அதே வேளையில் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னையில் 4 மருத்துவர்கள், ஈரோடு - 2, நாகப்பட்டினம், தூத்துக்குடியில் தலா 1 என மொத்தம் 8 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com