உத்தரப்பிரதேசத்தின் கரோனா அபாயப் பகுதியாக மாறியது ஆக்ரா

அதிகபட்சமாக ஆக்ராவில் ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரவும் அதிக வாய்ப்பு உள்ள அபாயப் பகுதியாக அப்பகுதி மாறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கரோனா அபாயப் பகுதியாக மாறியது ஆக்ரா

ஆக்ரா: அதிகபட்சமாக ஆக்ராவில் ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரவும் அதிக வாய்ப்பு உள்ள அபாயப் பகுதியாக அப்பகுதி மாறியுள்ளது.

ஆக்ராவில் மட்டும் தற்போது 142 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திங்கள்கிழமை மட்டும் ஆக்ராவில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர்  ஏப்ரல் 10ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்ட சிக்ரியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியுடன் நேரடி தொடரபில் இருந்தவர்கள். 5 பேர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.

மற்ற ஐந்து பேர்களும், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து, கரோனா உறுதி செய்யப்பட்ட நபர் மற்றும் மருத்துவரின் குடும்பத்தினர் ஆவர்.

இதையடுத்து ஆக்ராவில் 49 இடங்கள் கண்டறியப்பட்டு, கரோனா பரவும் அபாயம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com