அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன; கவலைப்பட வேண்டாம்: அமித் ஷா

மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன,
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நினைத்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், உங்கள் அருகில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரு உள்துறை அமைச்சராக நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பில் உள்ளது. ஒருவரும் கவலைப்பட வேண்டாம். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் மாநில அரசுகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com