தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 3,236 ஆக உயர்வு!

மகாராஷ்டிரத்தில் இன்று 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2020, 9:59 am

மகாராஷ்டிரத்தில் இன்று 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. 

இந்நிலையில், இன்று புதிதாக 34 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல்தெரிவித்துள்ளது. இதில், புணேவில் 23 பேரும், மும்பையில் 6 பேரும், நாசிக் நகரில் 4 பேரும், தானே பகுதியில் இருந்தும் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களில் இன்றைய தினமே மகாராஷ்டிரத்தில் பாதிப்பு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை மாநிலத்தில் 194 இறப்புகள் பதிவாகியுள்ளன

இந்தியாவில் கரோனா பாதிப்பு 13,387 ஆகவும் உயிரிழப்பு 437 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.